என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK MPs Meet"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.
    • அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு-ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.

    அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேல்-சபையில் 3-ல் 2 பங்கு ஆதரவு பா.ஜ.க. அரசுக்கு இல்லை என்பதால் மசோதாவை அங்கேயே தோற்கடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை.

    திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வரும் நவம்பர் 25ம் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

    மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள்.

    எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று 'இந்தியா' கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் பேசுங்கள். நாம் தீர்மானத்தில் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றியும் உங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசுங்கள்.

    நம்முடைய தீர்மானத்தில், நாம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, தமிழ்நாட்டிற்கான தேவைகள் என்ன என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் பேச வேண்டும். மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான்.

    எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் உங்கள் பேச்சு அமைய வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசி, புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்தக் குரலை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும். மென்மையாகப் பேசக் கூடாது. கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடுகளை அறிக்கையாகத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் உங்களுக்கான இலக்காக இருக்க வேண்டும்.

    எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளைவிடக் கழகத்தில் முக்கியமான பதவி என்றால், அது மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புதான். எனவே, அவர்களுக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோலதான், ஒன்றிய - பகுதி - பேரூர்க் கழகச் செயலாளர்களும். அவர்களுக்கும் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் தந்து, உங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களைப் பங்கேற்க வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

    ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதிப் பார்வையாளர்கள் நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். ஒரு தொகுதியைக்கூட இழக்கக் கூடாது என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எம்.பி.க்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தால், நம்முடைய வெற்றி இன்னும் எளிதாக இருக்கும்.

    கால அட்டவணைப்படி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் செய்யுங்கள். மாநில உரிமைகளுக்காக - தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளுக்காக - தொகுதி மக்களின் தேவைகளுக்காக - உங்கள் நாடாளுமன்றப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.
    • எம்.பி.க்கள் கூட்டம் குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவித்தார்.

    பாராளுமன்றத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது.

    இந்த நிலையில், நாளை ( மார்ச் 10-ம் தேதி) பாராளுமன்றம் மீண்டும் கூட இருக்கிறது. அப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.

    நாளை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    எம்.பி.க்கள் கூட்டம் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?. எந்தெந்த பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும்? யார் யார் பேசு வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. 

    ×