என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க.-வில் செங்கோட்டையன் - அ.தி.மு.க.-வுக்கு பாதிப்பா? : நயினார் நாகேந்திரன் கருத்து
    X

    த.வெ.க.-வில் செங்கோட்டையன் - அ.தி.மு.க.-வுக்கு பாதிப்பா? : நயினார் நாகேந்திரன் கருத்து

    • அ.தி.மு.க. எப்போதும் தனக்கென்று வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சி.
    • செங்கோட்டையனை பா.ஜ.க. இயக்குவதாக கூறுவது தவறு.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.கவில் இணைந்தனர்.

    இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. எப்போதும் தனக்கென்று வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சி.

    * அ.தி.மு.க.வில் இருந்தபோது பா.ஜ.க.வை நம்பி இருந்ததாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

    * பா.ஜ.க.வை செங்கோட்டையன் நம்பி இருந்ததாக கூறுவது ஏற்புடையதல்ல.

    * செங்கோட்டையனை பா.ஜ.க. இயக்குவதாக கூறுவது தவறு. அப்படி இயக்கி இருந்தால் அவர் ஏன் த.வெ.க.வுக்கு சென்றார்.

    * பா.ஜ.க. மிகப்பெரிய கட்சி, ஒரு கவுன்சிலர் கூட இல்லாத த.வெ.க.வுடன் எங்களை ஒப்பிடக்கூடாது.

    * செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×