என் மலர்
சென்னை
- 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி வரவில்லை.
- பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாளை மறுநாள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சனைகள், குறிப்பாக SIR பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி வரவில்லை. கல்விக்காக SSA வழியாக வரவேண்டிய அந்த நிதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்க இருக்கிறோம்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதற்காக ஒரு குழு வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றார்கள். ஆனால் எந்த பதிலும் இல்லை. சமீபத்தில் நடந்த நிலைக்குழு கூட்டத்திலும் நான் வலியுறுத்தி இருக்கிறேன். அந்த பிரச்சனையையும் பாராளுமன்றத்தில் எழுப்புவோம்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதையும் எழுப்ப இருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு முக்கியமாக இருக்கக்கூடிய, நாட்டிற்கு முக்கியமாக இருக்கக்கூடிய பல பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
SIR என்பது அடித்தட்டு மக்கள், BLO-க்கள் மீது அக்கறையின்றி, மனிதாபிமானமே இல்லாமல் நடத்தக்கூடிய ஒரு திட்டமாக உள்ளது.
பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு மிக குறுகிய அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், முடிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாகத்தான் இந்த பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எல்லா அதிகாரிகளும் மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அங்கு செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு இங்கு SIR பணியில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.
மக்களை பற்றி அக்கறையே இல்லாமல் இந்த நேரத்தில் குறுகிய காலத்தில் போதிய அவகாசம் தராமல் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
- இலங்கைக்கு (யாழ்பாணம்) கிழக்கே 80 கி.மீ., புதுவைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது.
- நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 6 மணி நேரத்தில் 8 கி.மீ. வேகத்தில் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. இலங்கைக்கு (யாழ்பாணம்) கிழக்கே 80 கி.மீ., புதுவைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் இருக்கிறது. டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து 60 கி.மீ., 50 கி.மீ., 25 கி.மீ. என மையம் கொள்ளும்.
நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ. தூரத்தில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் 14 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கூடுதலாக புனே, வதோதராவில் இருந்து 10 NDRF குழுக்கள் தமிழகம் வர உள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்ட உள்ளதாக துணை கமாண்டர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
தமிழகத்தில் 14 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மேலும் 10 குழு வரவழைக்கப்பட உள்ளனர்.
கூடுதலாக புனே, வதோதராவில் இருந்து 10 NDRF குழுக்கள் தமிழகம் வர உள்ளன. 5 அணிகள் சென்னையிலும், 5 அணிகள் விழுப்புரத்திலும் நிறுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
- கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் துறைமுகங்களில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் காரணமாக துறைமுகத்தில் கப்பல்களுக்கு ஆபத்து, கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாளை மறுநாள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
- டிட்வா புயலால் இதுவரை பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ கிடையாது.
- புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை.
சென்னை:
'டிட்வா' புயலானது சென்னையை நோக்கி நெருங்கிவருவதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்ட பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
* நாகை மாவட்டம் தோப்புத்துறையில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
* சென்னையை ஒட்டி புயல் செல்லும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கடற்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம்.
* டிட்வா புயலால் இதுவரை பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ கிடையாது.
* மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களின் உதவியை நாடவும் அறிவுறுத்தி இருக்கிறோம்.
* காற்றோடு மழை பெய்யும் போது பாதிப்புகள் இருக்கக்கூடும்.
* படகு, பயிர்கள் சேதம் தொடர்பாக 30-ந்தேதிக்கு பிறகு கணக்கெடுத்து இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சரும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
* ஒரு கோடியே 24 லட்சம் பேருக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
* கடலூர், விழுப்புரத்திற்கு பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
* புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை என்றார்.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- மக்கள் தங்குவதற்கு தேவையான முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
சென்னை:
டிட்வா புயல் வட தமிழக கடலோர பகுதியை நெருங்கி வருவதால் தமிழகத்தில் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மாவட்ட கலெக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மாநில கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தேவையான அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்குவதற்கு தேவையான முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
- வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், மயிலாடுதுறை, மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
- பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை:
'டிட்வா' புயலானது சென்னையை நோக்கி நெருங்கிவருவதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், புயலின் தாக்கம், செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
டெல்டா மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பல்வேறு பணிகளுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, நடைபயிற்சி மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபயிற்சிக்கு வரும் மக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரையும் சந்தித்து பேசும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
அந்த வகையில், இன்று நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது.
- புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
டிட்வா புயல் கரையை நோக்கி நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் உள்ளது.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புயல், மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி வருகிறது. சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை வந்தடையும்.
டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இரவு முதலே மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற இருந்தது. 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருந்தனர். அவர்களில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 50 பேர் தேர்வு செய்யப்படுவர்.
இந்த தேர்வு வங்கக்கடலில் நிலவும் 'டிட்வா' புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, அந்த தேர்வு வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.






