என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்ப தில்லையே - பாரதியார் வரிகளை பதிவிட்ட மாணிக்கம்தாகூர்
    X

    'அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்ப தில்லையே' - பாரதியார் வரிகளை பதிவிட்ட மாணிக்கம்தாகூர்

    • நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்.
    • எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்.

    மதுரையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்" என்று தெரிவித்து இருந்தார்.

    மாணிக்கம் தாகூரின் பேச்சு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    'அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்ப தில்லையே' என்ற பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

    கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பு குறித்து அறிக்கை வழங்கியதாக செல்வப்பெருந்தகை பேட்டி அளித்த நிலையில் மாணிக்கம் தாகூர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×