என் மலர்
சென்னை
- பேரிடர் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.9,160 கோடி செலவு செய்திருக்கிறது.
- 2026-27ல் மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3.93 லட்சம் கோடியாக இருக்கிறது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* புயல், பெரு வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறம்படக் கையாண்டது.
* ரூ.50 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் நிதி கோரிய போதிலும் ரூ.1151 கோடி மட்டுமே கொடுத்தது.
* பேரிடர் நிவாரண நிதியில் சொற்பமான நிதியைத் தான் மத்திய அரசு கொடுத்தது.
* பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு தமிழகத்தில் ரூ.6,013 கோடி தான் கொடுத்துள்ளது.
* பேரிடர் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.9,160 கோடி செலவு செய்திருக்கிறது.
* இடைக்கால பட்ஜெட்டில் வறட்சி தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* வரிப் பகிர்வு பங்கை அதிகரிக்க வேண்டும் என கேட்ட போதும் 41% ஆக தொடரும் என அறிவித்தது.
* அரை நூற்றாண்டு காலம் கடந்த பிறகும் கூட நிலை மாறவில்லை.
* தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு 4.07% ஆக குறைக்கப்பட்டதால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* 0.44% மிகச்சிறிய அளவிலேயே நிதிப் பகிர்வு உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* 16-ஆவது நிதிக்குழுவும் தனது கடமையில் இருந்து தவறி இருக்கிறது.
* செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது.
* ஜி.எஸ்.டி.யால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
* 2025-26 மத்திய அரசின் பட்ஜெட்டில் வரிப் பங்கு திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சுமார் ரூ.15,000 கோடி இழப்பீட்டு நிதி தர நிபந்தனை விதிக்கப்படுகின்றன.
* மத்திய அரசு பொறுப்பேற்ற திட்டங்களுக்கான நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள்.
* ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கு ரூ.3548 கோடி, ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3112 கோடி நிலுவை.
* மத்திய அரசு தர வேண்டிய ரூ.9500 கோடி நிலுவைக் கடனில் தொடர்ந்து இருந்து வருகிறது.
* நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரிவருவாய் ரூ.2.06 லட்சம் கோடி.
* நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 11.15 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
* மத்திய அரசின் வரிப் பங்கீடு தமிழகத்திற்கு ரூ.62 ஆயிரம் கோடியாக இருக்கிறது.
* 2026-27ல் மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3.93 லட்சம் கோடியாக இருக்கிறது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* பால் பண்ணைகள் நவீனமயமாக்கலுக்காக ரூ.758 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.612 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் பொதுப்பணித்துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு
* மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து நிதி வழங்காத நிலையிலும் ஆசிரியர், அரசு ஊழியர் நலனை காத்து வருகிறோம்.
* அரசு பணியில் இருப்பவர் விபத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.1 கோடி வழங்கப்படும்.
* ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது. 5 ஆண்டுகளில் புதிதாக 43 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
* மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 23.50 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் 17318 பேர் புதிதாக காவல்துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* போதை பொருள்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
* பள்ளி, கல்லூரிகளில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடம் தமிழ்நாடு முதலிடம்.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறைக்கு ரூ.17,111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதுவரை 77 ஆயிரத்து 800 இணைய வழி வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு, 2021-22-ம் நிதி ஆண்டில் 84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடானது, 2025-26 ஆம் நிதியாண்டில் 1433 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் 23 லட்சத்து 56 ஆயிரத்து 623 நபர்களுக்கு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் அதன் சூழ்பகுதிகள் மற்றும் மாநிலத்தின் இதர நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, இதுவரை 77 ஆயிரத்து 800 இணைய வழி வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், சென்னை மற்றும் அதன் கூழ் பகுதிகளில் 15 ஆயிரத்து 393 இணையவழி பட்டாக்களும், இதர மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 62 ஆயிரத்து 407 இணையவழி பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
* நவீன மின்னணு நில அளவைக் கருவிகளைப் பயன்படுத்தி நிகழ்நேர இயக்கவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மறு நில அளவைப் பணி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் போன்ற அனைத்து சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், 35.33 லட்சம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும், இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5463 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
* ரூ.1000 கோடியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி, ரூ.44 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
* அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 29 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,317 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
* 84 கோவில்களில் ரூ.425 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
* கோவிலுக்குச் சொந்தமான 8111 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 120 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
* சுற்றுலாத்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
* அதிகம் அறியப்படாத 22 சுற்றுலா தலங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
* மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசின் தலையாய நோக்கம்.
* மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
* நடப்பாடிண்டில் 14.89 லட்சம் மெட்ரின் டன், 5 ஆண்டுகளில் 2.15 கோடி மெட்ரின் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூட்டுறவு உணவு நுகர்வோர் துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 45 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.57 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.4,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கூட்டுறவு வங்கிகளில் ரூ.12,359 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
* மீனவர்களின் நலனுக்கும் நல வாழ்வுக்கும் தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
* இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.20 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
* தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுக பணிகள் நடைபெற்று வருகின்றன.
* மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் தொகை ரூ.8000ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- தொழில் முதலீடு ஊக்குவிப்புத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.1791 கோடியில் கோவையில் ஜி.டி.நாயுடு பெயரில் உயர்மட்ட சாலை திறக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* கப்பல் கட்டுமானத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
* தொழில் முதலீடு ஊக்குவிப்புத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.10.70 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் ரூ.405 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு செமி கண்டக்டர் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை பரவலான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
* கோவை மாவட்டத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது.
* சென்னை தரமணியில் செமி கண்டக்டர் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
* இடைக்கால பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.819 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் தொழில் முதலீடு, வர்த்தகத்துறைக்கு ரூ.4882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் மின் தேவை எதிர்காலத்தில் இருமடங்காக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
* பசுமை மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் 1000 மெகாவாட் மின்கல சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் ராம்சார் தலங்கள் உள்ளன.
* கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 100 காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் ரூ.6121 கோடியில் ரூ.12,087 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 12 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 1885 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.8313 கோடியில் 4 வழித்தடமாக அகலப்படுத்தப்படுகின்றன.
* 5 ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் 3,673 பேருந்துகள் ரூ.361 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
* ரூ.1791 கோடியில் கோவையில் ஜி.டி.நாயுடு பெயரில் உயர்மட்ட சாலை திறக்கப்பட்டுள்ளது.
* புதிய சிற்றுந்து திட்டத்தின் மூலம் 6303 வழித்தடங்களில் சிற்றுந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
* மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நெடுஞ்சாலைகள் துறை, சிறுதுறைமுகங்கள் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
* 1,168 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
* சென்னையில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே ரூ.671 கோடியில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
* புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு நில எடுப்புப் பணிகளுக்கு அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செயல்பட்டு வருகிறது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டிற்கு பதக்கம் பெற்றுத் தந்த 5403 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.176 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மூலம் ரூ.101 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
* 1.14 லட்சம் வீடுகள் ரூ.969 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளன.
* கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20,484 கி.மீ. சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
* ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் 87 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* 40 ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பிக்க ரூ.809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நதிக்கரை மேம்பாட்டிற்காக ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செயல்பட்டு வருகிறது.
* 5 ஆண்டுகளில் 38 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,397 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுகின்றன.
* தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கொரோனா பெருந்தொற்றை தி.மு.க. அரசு பேராற்றலுடன் சமாளித்தது.
* காவிரி, வைகை ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு பூங்காக்கள் அமைக்க ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.
* முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில் இதுவரை 6,374 கோடி ரூபாய் மக்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.
* புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
* இதுவரை 79.17 லட்சம் பேருக்கு செய்யப்பட்டசோதனையில் 1,929 நபர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
* மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 36 லட்சத்திற்கு அதிகமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
* 12.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
* 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.
* 40 புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் அமைக்க ரூ.291 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை உதவித்தொகை தரப்படுகிறது.
* திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1070 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,171 கோடி மதிப்பீட்டில் மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளன.
- சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.17,088 கோடி ஒதுக்கீடு.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பெண் ஓதுவார் நியமனம் தமிழக அரசின் மகத்தான சாதனை.
* 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
* தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டு பெண்கள்.
* ஏழை எளிய தாய்மார்களின் துயரை துடைக்கும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம். ரூ.1884 கோடியில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறையில் உள்ளது.
* 25 இடங்களில் மூத்த குடிமைக்களுக்காக அன்பு சோலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தில் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
* அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு, பணி உயர்விலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அரசு மருத்துவமனைகளில் மிகவும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.1,471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நாட்டிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கும் ரூ.5,463 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* TNWESafe தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு பாதுகாப்பு திட்டம்.
* மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் தென் தமிழ்நாட்டில் அறிவாலயமாக உள்ளது.
* பள்ளிக்கல்வித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,171 கோடி மதிப்பீட்டில் மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளன.
* சேலம், கோவை, நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் 38 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
* உயர்கல்வித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
* உயர்கல்வியில் தேசிய சராசரியை விட 47% என்ற அளவில் தமிழகம் முதலிடம்.
* முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* குடிமைப் பணித் தேர்வுகளில் வென்ற 59 பேரில் 52 பேர் நான் முதல்வன் திட்ட பயனாளிகள்.
* சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.17,088 கோடி ஒதுக்கீடு
* மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண்கள் திட்டத்தில் 6.95 லட்சம் கல்லூரி மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.
- வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகள் 1,400 பேர் தமிழ் கற்று பயனடைந்துள்ளனர்.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. அரசு செய்த சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டு அமைச்சர் தங்ககம் தென்னரசு சட்டசபையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப்போரை தொடங்கி உள்ளோம்.
* அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய நீர் வளம் பெருக்கி உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை செய்துள்ளோம்.
* உலகை வெல்லும் இளைஞர்களை உருவாக்கிட நாம் வடிவமைத்த திட்டங்கள் அனைத்தும் வெற்றி.
* மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை உள்ளிட்ட சவால்களுடன் பயணம் செய்து வருகிறோம்.
* பன்னாட்டுத் தனித் தமிழ் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
* கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.
* தந்தை பெரியாரின் நூல்கள் 21 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
* கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு பேரறிவுச் சிலை என பெயர் சூட்டியவர் முதலமைச்சர்.
* தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன.
* வரவு செலவு திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கலைஞர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
* தமிழ்தாய் வாழ்த்தை மாநில பாடலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது
* தமிழக அரசின் முத்திரை திட்டங்களில் முதன்மையானது மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் வங்கிக் கணக்கில் 3 மாத தொகை ரூ.3000, கோடை கால சிறப்புத் தொகை ரூ.2000 என ரூ.5000 வரவு வைக்கப்பட்டது.
* ஒரே நாளில் ரூ.6500 கோடி நிதியை ஏழை எளியவரின் கரங்களுக்கு சென்று சேர்த்தவர் முதலமைச்சர்.
* மகளிர் தற்சார்பு வாழ்வுக்காக சுய உதவிக்குழுக்களை கலைஞர் கருணாநிதி தொடங்கினார்.
* விடியல் பயணம் திட்டம் மூலம் 881 கோடி முறை மகளிர் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
* வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகள் 1,400 பேர் தமிழ் கற்று பயனடைந்துள்ளனர்.
* கைம்பெண்களின் கண்ணிய வாழ்வை உறுதி செய்திட நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
* மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 35 என்ற அளவில் உள்ளது.
* புதிய அருங்காட்சியகங்கள் அமைப்பதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் 10,469 வீடுகள் கட்டித்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது.
- அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார்.
- கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக காது குத்தும் விழா.
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.
சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அ.தி.மு.க. நூதன முறையில் விமர்சனம் செய்துள்ளனர்.
பட்ஜெட் என்ற பெயரில் 'மாபெரும் காது குத்தும் விழா' நடைபெற உள்ளது என பத்திரிகை அடித்து அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார். கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக காது குத்தும் விழா. விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும்.
பின்குறிப்பு: சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல முறைகளில் மொய் வைக்கலாம் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
- சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.
2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
- கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
- கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறாமல் இருந்து வந்தார்.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் சமீப காலமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார்.
த.வெ.க.வில் இணைந்துள்ள மனோகரன் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். அதனை தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறாமல் இருந்து வந்த மனோகரன் தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
அதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் த.வெ.க.வில் இணைந்தார். இவர் 2006- 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
வரும் தேர்தலில் த.வெ.க. சார்பில் இவர்கள் அவரவர்கள் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






