என் மலர்
சென்னை
- ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது.
- 7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள்.
சட்டசபையில் 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அவையில் கே.பி.முனுசாமி பேசுகையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது என்று கூறினார்.
தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உங்களுடைய இடத்திற்கு செல்லுங்கள் இல்லையென்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நடவடிக்கை எடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் உண்மைக்கு புறம்பான கருத்தை அமைச்சர் சொல்கிறார்.
7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள், அமைச்சர் தவறான கருத்தை பதிவு செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடாமல் பரவலாக்கப்பட வேண்டும்.
- பன்முக தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தான் அடிப்படை.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி தான்.
* இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும்.
* முயன்றால் மீண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியும்.
* அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடாமல் பரவலாக்கப்பட வேண்டும்.
* இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சியை நாம் தொடங்க வேண்டும்.
* பன்முக தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தான் அடிப்படை.
* மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடும் வளரும் என்பதை மத்திய அரசிற்கு உணர்த்துவோம்.
* இது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல. இந்திய மக்களின் வாழ்வியலுக்கும் வளர்ச்சிக்குமான கோரிக்கை என்று கூறினார்.
இதையடுத்து மத்திய - மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலைக் குழு அறிக்கையை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
- அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.
- மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது தி.மு.க.
* அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது தமிழ்நாடு.
* நிதி உரிமைக்காக தமிழ்நாடு இன்னமும் போராட வேண்டிய நிலைதான் உள்ளது.
* அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.
* அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றிருக்க வேண்டும்.
* மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளை கடந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமையை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம்.
* மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.
* அனைத்து அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு மத்திய அரசு ஏதேச்சதிகாரமாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடிப்படை உரிமைகளை கூட மறுத்து, தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
- மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து, வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான
சி.பி.ஐ.எம். தமிழ்நாடு மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியுமான திருமதி. பா. ஜான்சிராணி அவர்கள் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று, மு.க.ஸ்டாலினின் அரசு அனைத்து விதமான "கோரிக்கைக் குரல்களை" ஒடுக்க நினைப்பதுதான் திமுக-வினுடைய Fascist mentality-க்கான Proof!
ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து, அடிப்படை உரிமைகளை கூட மறுத்து, தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- சென்னை, தர்மபுரி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- அதிநவீன கருத்தடை சாதனமானது, 3 வருடத்திற்கு கர்ப்பத்தடைக்கானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் துறை சார்பாக, பெண்களுக்கான 'இம்பிளானன் என்.எக்ஸ்டி' என்ற அதிநவீன கருத்தடை சாதனம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் ஜோஸ்பின் ஹேமா, டாக்டர்கள் சித்ராதேவி, ஜெயந்தி பிரசாத். மருத்துவ இருப்பிட அதிகாரிகள் சரவணன், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சாதனத்தின் செயல்பாடுகள் குறித்து குடும்ப நலத்துறை துணை இயக்குனர் நடராஜன், மகப்பேறு சிகிச்சை பிரிவு தலைவர் காயத்ரி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை, தர்மபுரி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது பெண்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒரு சாதனம். கருத்தடை மாத்திரைகள், காப்பர்-டி போன்ற மருத்துவ முறைகளை காட்டிலும் இது பெண்களுக்கு பாதுகாப்பானது, வசதியானது.
இது தீக்குச்சி போன்று 3 செ.மீ நீளம் கொண்டது. வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு, இடது கையிலும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது கையிலும் இந்த சாதனம் பொருத்தப்படுகிறது. தீக்குச்சி வடிவில் இருப்பதால், தோலுக்கு அடியில் செலுத்தும்போது கையில் இருப்பது தெரியாததுபோல் இருக்கும். இதனால், எந்தவித பாதிப்பும் வராது.
இந்த அதிநவீன கருத்தடை சாதனமானது, 3 வருடத்திற்கு கர்ப்பத்தடைக்கானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒருமுறை செலுத்தினால் போதும். அதில் உள்ள மருந்து தினசரி உடலில் வெளியாகி கரு உருவாதலை தடுக்கும். இதன் மூலம் பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு கர்ப்பத்தைத் தடுக்க முடியும். ஒரு வருடம் கழிந்த உடன் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாலும், உடனடியாக அதனை வெளியே எடுத்துவிடலாம்.
குழந்தை பெற்று கொண்ட பெண்களுக்குதான் இது செலுத்தப்படுகிறது. இதன் மூலம் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பும் வராது. 18 வயது முதல் 45 வரை உள்ள பெண்களுக்கு இது பொருத்தப்படுகிறது. இதன் விலை ரூ.3 ஆயிரம். அரசு அஸ்பத்திரியில் உள்ள பெண் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. உடம்பில் அந்த சாதனம் இருப்பது போன்று தெரியாது. எந்தவித தொந்தரவு, அசவுகரியமும் இருக்காது. நமது அன்றாட பணிகளை செய்ய முடியும். குறிப்பாக, இதய நோய் உள்ளிட்ட இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சாதனம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். 3 வருடங்கள் கடந்துவிட்டால், அதனை எடுத்து விட்டு புதிதாக வேறு ஒன்றை பொருத்தி கொள்ளலாம்.
இதனை நோயாளிகளுக்கு பொருத்துவது குறித்து அரசு டாக்டர்களுக்கும். தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 72 சாதனம் கையிருப்பு உள்ளது. தேவைப்படும்பட்சத்தில், கூடுதலாக அரசிடம் கேட்டு பெற்று கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
- ஆடு, கோழி, மீன், இறால், கருவாடு, முட்டை என அசைவப் படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
சென்னை திருவொற்றியூரின் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடு, கோழி, மீன், இறால், கருவாடு, முட்டை என அசைவப் படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
அசைவப் படையலை சாப்பிட்டால் நோய்நொடி நீங்கும் என்ற நம்பிக்கையால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் படையலை வாங்கி சென்றனர்.
- தி.மு.க., அ.தி.மு.க.விடம் பா.ம.க. தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
- தனது ஆதரவாளவர்களுடன் அ.தி.மு.க. தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்தார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டாலும், மேலும் சில கட்சிகளை உள்ளே இழுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
ராமதாஸ் தரப்பு பா.ம.க., தே.மு.தி.க. இரண்டு கட்சிகளும் இன்னமும் தங்களுடைய கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருக்கின்றனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இருவருக்கும் இடையில் சில மாதங்களாகவே மோதல் இருந்து வருகிறது. மோதலையடுத்து கட்சியில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கினார். ஆனாலும் பா.ம.க. தலைவர் நான்தான். என்னை கட்சியை விட்டு நீக்க முடியாது அன்புமணி என்று கூறி வந்தார்.
இதனையடுத்து தனது ஆதரவாளவர்களுடன் அ.தி.மு.க. தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்தார். அதே நேரம் ராமதாஸ் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தார்.
தி.மு.க., அ.தி.மு.க.விடம் அவரது தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
பா.ம.க. ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இன்னமும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், தற்போது அவரது தரப்பு எம்.எல்.ஏ. அருள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாசின் பா.ம.க. தரப்பை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ. அருள் தன்னை சந்தித்த போதும் கூட்டணி குறித்து பேச இ.பி.எஸ். மறுப்பு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அன்புமணி தரப்பு ஏற்கனவே கூட்டணியில் இணைந்து விட்டதாலும், ராமதாஸ் தரப்பை கூட்டணியில் இணைத்தால் அன்புமணி தரப்பை சமாதானப்படுத்த வேண்டிய நிலை வரும். அன்புமணி தரப்பு ஒருவேளை சமாதானமடைந்தாலும், தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்படும் என்று இ.பி.எஸ். தரப்பு மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன்.
- பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான்.
ஆலந்தூர்:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு கோவையில் இருந்து, சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்ஜெட்டில் முத்தான 30 அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார்கள். பட்ஜெட்டை முழுமையாக படித்து விட்டு, பதில் சொல்கிறேன். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் எல்லா அறிவிப்புகளையும், அமல்படுத்த முடியுமா? தேர்தல் முடிந்து புதிய அரசு அமைத்த பின் அமல்படுத்த முடியுமா? என்ற கேள்விகள் உள்ளன. தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது நடக்கின்ற, ஒரு பட்ஜெட்டை செயல்படுத்தும், அரசாக இருக்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது. அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.
வருகின்ற ஆட்சி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் தான் எஜமானார்கள். தேர்தல் முடிவுகள் வரட்டும், பார்க்கலாம். உண்மையிலேயே அதுபோன்ற ஒரு சூழல் வருகிறதா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஈசா மையத்தில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் முதல் வரிசையில் இருந்தோம். மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், எல்.முருகன், முன்னாள் அமைச்சர் வேலுமணி, புதுச்சேரி மந்திரிகள் எல்லோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துபேசினேன்.
பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான். அதனால் தமிழ்நாட்டிற்கு நல்லது நடந்தால் வரவேற்போம். பிரதமர் வருவது தவறு இல்லை. அதே நேரத்தில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விலை சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் குறைந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 320-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வார தொடக்கம் முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520
15-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
14-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
13-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-02-2026- ஒரு கிராம் ரூ.265
16-02-2026- ஒரு கிராம் ரூ.265
15-02-2026- ஒரு கிராம் ரூ.280
14-02-2026- ஒரு கிராம் ரூ.280
13-02-2026- ஒரு கிராம் ரூ.280
- தேர்தல் கமிஷனர்கள் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் 10-5-2026 அன்று நிறைவடைகிறது. புதுச்சேரி சட்டசபை 15-6-2026-ல் முடிவடைகிறது. இதுபோல மேற்கு வங்காள சட்டசபை 7-5-2026-லும், அசாம் சட்டசபை 20-5-2026-லும், கேரள சட்டசபை 23-5-2026-லும் நிறைவடைகிறது. இதனால் இந்த மாநிலங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்தல்களுக்கான அட்டவணை மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தலை முன்னிட்டு. தேர்தல் கமிஷனர்கள் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி விட்டனர். தேர்தல் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக தேர்தல் அதிகாரிகள் அசாமில் முகாமிட்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு இந்த 5 மாநிலங்களுக்கும் பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில்தான் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளி இறுதித் தேர்வுகளை கருத்தில்கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வைத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
தேர்தலைப் பொறுத்தவரை கடந்த முறை மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தல் நடைபெற்றது. அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது.
- மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசுவதற்கு செல்வப்பெருந்தகை கண்டம் தெரிவித்து இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மாநிலத் தலைவர்கள் உட்பட யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க உரிமை கிடையாது. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது. கூட்டணி குறித்து தேசிய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவித்து இருந்தார்.
மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசுவதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காலை வணக்கம்.
தேடிச்சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இதுவரையில் 10 11-வது பிளாட்பாரத்தில் 324 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
- மின்சார ரெயில் பிளாட்பாரம் மாற்றத்தால் ராமேஸ்வரம் சேது ரெயில் மட்டும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்படும் 10 மற்றும் 11-வது பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் புறநகர் ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இது குறித்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக வழக்கம் போல் பத்து மற்றும் 11-வது நடைமேடைகளில் கையாளப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 20-ந்தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு வரை 45 நாட்களுக்கு 5 மற்றும் 6- வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்- அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து மின்சார ரெயில்களும் 6-வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும்.
அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை மறுமார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரெயில்களும் இதே காலகட்டத்தில் எழும்பூரில் 5-வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும்.
மின்சார ரெயில்கள் விரைவுப் பாதையில் இருந்து இயக்கப்பட உள்ளன. ரெயில் எண்கள் மற்றும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள மின்சார சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த 45 நாட்களில் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது. புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 164 மின்சார ரயில்கள் இயக்கப்படும். 84 ரெயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும் 80 ரெயில்கள் செங்கல்பட்டு- தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கமும் இயக்கப்பட உள்ளது.
இதுவரையில் 10 11-வது பிளாட்பாரத்தில் 324 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் 160 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரெயில் பிளாட்பாரம் மாற்றத்தால் ராமேஸ்வரம் சேது ரெயில் மட்டும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் நடைபெற்று இறுதியில் தொடங்கும். இதே போல கிளாம்பாக்கம் ரெயில் பணியும் நிறைவு பெற்றுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மார்ச் மாதம் திறக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






