search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் பிரசார இயக்கம்
    X

    பிரசார இயக்கம் நடைபெற்றது.

    தஞ்சையில் பிரசார இயக்கம்

    • ஏழை மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும்.
    • பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.

    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டின் ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்போம், மாற்றத்தை நோக்கி அனைத்து மக்களையும் அணி திரட்டுவோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய பிரசார இயக்கம் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடை பயண பிரசார இயக்கம் இன்று 2-வது நாளாக நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி 2-ம் நாள் பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    ஏ.ஐ.டி.யு.சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் பிரசார இயக்கத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.

    இந்த பிரசார இயக்கத்தில், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஏழை மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    இதில் மூத்த தலைவர் கிருஷ்ணன், மாநகரத் துணைச் செயலாளர் முத்துக்குமரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, செல்வகுமார், மாநகர நிர்வாகிகள் மூர்த்தி, கல்யாணி, ஆசிரியர் சுந்தரமூர்த்தி, மாரிமுத்து, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா நன்றி கூறினார்.

    Next Story
    ×