search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில் காலை உணவு திட்ட ஆலோசனை கூட்டம்- கலெக்டர்- எம்.எல்.ஏ., பங்கேற்பு
    X

    ஆலோசனை கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., பேசியபோது எடுத்தபடம். அருகில் கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளார்.




    விளாத்திகுளத்தில் காலை உணவு திட்ட ஆலோசனை கூட்டம்- கலெக்டர்- எம்.எல்.ஏ., பங்கேற்பு

    • காலை உணவு திட்டம் முதல்கட்டமாக 56 அரசு தொடக்கபள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
    • காலை சிற்றுண்டி தினசரி காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் முதல்கட்டமாக ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள 56 அரசு தொடக்கபள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., முன்னிலையில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊரகப்பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்க ளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில், திங்கட்கிழமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா கேசரி அல்லது ரவா கேசரி சுழற்சி முறையில் ரவா காய்கறி கிச்சடி இதுபோன்ற வகையான காலை உணவு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    பள்ளி தொடங்கும் முன் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும். காலை சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு பள்ளிகளில் தினசரி காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், இத்திட்டத்தினை செயல்படுத்துதல் கிராம ஊராட்சி அள வில் பஞ்சாயத்து தலைவர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், ஒரு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், கண்காணிப்புக்குழுக்கள் காலை உணவு வழங்கும் திட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதற்கு மேற்கண்ட துறை அலு வலர்களை கொண்ட மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அறி வுறுத்தப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நல திட்ட அலுவலர் வீரபத்திரன், விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் பி.டி.ஓக்கள் தங்கவேல், முத்துக்குமார், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×