என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பாலாலய விழா
  X

  பாலாலய பூஜைகள், பூர்ணாஹூதி வேள்வி நடைபெற்றது.

  புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பாலாலய விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.
  • இதன்படி நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

  தஞ்சாவூர்:

  தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

  இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் தொடங்கியது. கோவிலில் உள்ள ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் புனரமைக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

  இதன்படி நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாலாலயம் நடைபெற்றது.

  திருப்பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தேதி முடிவு செய்யப்பட உள்ளது.

  Next Story
  ×