search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
    X

    வளைகாப்பு விழா நடைபெற்ற போது எடுத்தபடம்.

    கயத்தாறில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா

    • கயத்தாறில் 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், பழத்துடன் மாலை அணிவித்து வளைகாப்பு செய்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறில் 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.கயத்தாறு அங்கன்வாடி வட்டார ஒருங்கிணைப்பாளர் தாஜ்ஹீன்நிஷா தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை குத்துவிளக்கு ஏற்றி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் நயினார்பாண்டியன், செல்வகுமார், தேவி, செய்யது அலி பாத்திமா, வெயிலாட்சி, ஆதிலட்சுமி, கோகிலா மற்றும் ஆரம்ப சுகாதாரநிலைய டாக்டர்கள் திலகவதி, மணிமங்கலம், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார், தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை, சிறுபான்மை பிரிவு செயலர் சேக்தாவூது, வார்டு செயலாளர் முத்துக்குமார் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், பழத்துடன் மாலை அணிவித்து வளைகாப்பு செய்தனர்.

    Next Story
    ×