search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில்  பெரும் விபத்து தவிர்ப்பு
    X

    மேம்பாலத்தில் சிந்திய ஆயில் மீது மணலை கொட்டி சீரமைத்த போலீசார்

    நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு

    • நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
    • எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பாலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனத்தில் இருந்து சாலையில் சிறிது தூரம் ஆயில் சிந்தியது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பாலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனத்தில் இருந்து சாலையில் சிறிது தூரம் ஆயில் சிந்தியது.

    இதனால் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையில் வழுக்கி விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக பெரிய வாகனங்கள் அந்நேரத்தில் வராததால் சாலையில் விழுந்தவர்கள் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பொதுமக்கள் தகவலின்பேரில் நெல்லை சந்திப்பு போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி தலைமையில் காவலர்கள் ராஜதுரை மற்றும் கோபால் ஆகியோர் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு விரைந்து சென்று அருகிலிருந்த மணலை கொண்டு சாலையில் சிந்திய ஆயில் மீது கொட்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வாகனங்கள் வழக்கம் போல சென்றது.

    Next Story
    ×