search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யார் மீதோ உள்ள கோபத்தை தி.மு.க. பக்கம் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி - ஆர்.எஸ்.பாரதி
    X

    ஆர்.எஸ்.பாரதி

    யார் மீதோ உள்ள கோபத்தை தி.மு.க. பக்கம் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி - ஆர்.எஸ்.பாரதி

    • அ.தி.மு.க. மோதலுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
    • நாங்கள் யார் பக்கமும் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.

    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. மோதலுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. யாருடைய அழிவிலும் தி.மு.க. இன்பம் காணாது. அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் வீணாக தி.மு.க.வை வம்புக்கு இழுக்க வேண்டாம்.

    அ.தி.மு.க. செய்த வன்முறையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் பின்புலத்தில் தி.மு.க. இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாங்கள் யார் பக்கமும் செல்ல வேண்டிய அவசியமில்லை.

    எதற்கெடுத்தாலும் முதலமைச்சரையும், தி.மு.க.வையும் தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது. யார் மீதோ உள்ள கோபத்தை தி.மு.க.வின் பக்கம் எடப்பாடி பழனிசாமி காட்டுகிறார். வருமான வரி சோதனையை கண்டிக்க தெம்பில்லாமல் தி.மு.க.வை குறை கூறுகிறார்.

    சட்டம், ஒழுங்கு காரணமாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது காவல்துறையை வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×