search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

    • தினக்கூலி ரூ.600-ஐ சட்டமாக்க வேண்டும்.
    • வீடற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    விவசாய தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த மத்திய கூலி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தினக்கூலி ரூ.600-ஐ சட்டமாக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும். வீடற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். சேதமடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றி புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பர்ட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், குமாரராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாரிமுத்து எம்.எல்.ஏ., சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அமிர்தராஜா, மாவட்ட தலைவர் கலைமணி, மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×