search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அமைக்க அ.தி.மு.க.வினர் மனு
    X

    கலெக்டர் விஷ்ணுவிடம் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தபோது எடுத்த படம்.

    நாங்குநேரியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அமைக்க அ.தி.மு.க.வினர் மனு

    • நாங்குநேரி தொகுதியில் சுமார் 2 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
    • தற்–போது இந்த மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்–கு–நேரி தாலுகாவை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்களும், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, ஏர்வாடி, திருக்குறுங்குடி ஆகிய 4 பேரூராட்சிகளும், நாங்குநேரி, களக்காடு என 2 யூனியன்களும், களக்காடு நகராட்சியும் உள்ளன.

    நாங்குநேரி தொகுதியில் சுமார் 2 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் விவசாய கூலியாக உள்ளனர். இவர்கள் காயமடைந்தாலோ, பெரிய நோய் தாக்கினாலோ நாங்குநேரி தாலுகா அரசு மருத்துவமனையை நம்பி இருக்க வேண்டி உள்ளது.

    கொரோனா காலத்–தில் இந்த மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தது.

    இந்தநிலை–யில் நாங்குநேரி அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று சுகாதாரத்துறை அந்த மருத்துவமனையை தரம் உயர்த்த அரசாணை வெளியிட்டது.

    இதற்காக நாங்குநேரி நான்கு வழிச்சாலை அருகில் அரசு இடம் 10 ஏக்கருக்கு அதிகமாக உள்ளதால் இங்கு மாவட்ட மருத்துவமனை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.

    ஆனால் தற்–போது இந்த மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நாங்குநேரியில் தான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    அப்போது பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×