search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கருப்பாநதி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும்- கலெக்டரிடம் நகர்மன்ற தலைவர் கோரிக்கை
    X

    கலெக்டர் ரவிச்சந்திரனிடம் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் கோரிக்கை மனு வழங்கிய காட்சி.

    கடையநல்லூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கருப்பாநதி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும்- கலெக்டரிடம் நகர்மன்ற தலைவர் கோரிக்கை

    • கடையநல்லூர் நகராட்சியில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது.
    • தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், கருப்பாநதி அணையிலிருந்து சுமார் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை கடைய நல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளிலும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது.

    இவர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நகராட்சி சார்பில் பெரியாற்றுப்படுகையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட உறைகிணறு அமைக்கப் பட்டும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், கருப்பாநதி அணைக்கட்டு குடிநீர் திட்டம் என இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது தொடர் வெயில் காரணமாக வும், தென்மேற்கு பருவ மழையும் பொய்த்ததால் பெரியாறு கல்லாற்றிலும் தண்ணீரின்றி வறண்டு விட்டது.

    கடையநல்லூர் நகராட்சிக்கு சராசரியாக சுமார் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் வரத்து வந்த நிலையில், தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கருப்பாநதி அணையிலிருந்து சுமார் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது.

    இந்த குடிநீரை வைத்து தான் அனைத்து பகுதி களுக்கும் சரி சமமாக பகிர்ந்து குடிநீர் வினியோகம் செய்து வருகின்றோம்.

    எனவே இப்பகுதி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீரை கூடுதலாக திறந்து விட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×