என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்-கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
  X

  மாவுப்பூச்சி தாக்கியுள்ள பருத்தியை படத்தில் காணலாம்.
  பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்-கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெள்ளை நிற மாவு போன்ற பூச்சிகள் இலை, தண்டு மற்றும் குருத்து பகுதிகளில் காணப்படுகிறது.
  • பூஞ்சாண வளர்ச்சி தோன்றும், தாக்கப்பட்ட செடிகள் வாடி கருப்பு நிறமாக மாறிவிடும்.

  செய்துங்கநல்லூர்:

  கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கருங்குளம் வட்டாரத்தில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பூ பிடிக்கும் பருவம், காய் தோன்றும் பருவம், காய் எடுக்கும் பருவம் ஆகிய மூன்று நிலைகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருத்தியில் தற்போது மாவுப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

  வெள்ளை நிற மாவு போன்ற பூச்சிகள் இலை, தண்டு மற்றும் குருத்து பகுதிகளில் காணப்படுகிறது. தாக்கப்பட்ட செடிகள் இலையின் அடிப்பகுதியில் கூட்டமாக மெழுகு போன்று காணப்படும். பூஞ்சாண வளர்ச்சி தோன்றும், தாக்கப்பட்ட செடிகள் வாடி கருப்பு நிறமாக மாறிவிடும்.

  மாவுப்பூச்சியின் தாக்குதல் ஆரம்பநிலையில் இருக்கும் போது பாதிக்கப்பட்ட செடியினை பிடுங்கி எறிந்து விட வேண்டும். தாக்கப்பட்ட செடியின் மீது அதிக வேகத்துடன் தண்ணீர் பீச்சி அடிக்க வேண்டும். மீன் எண்ணெய் ரோசின் சோப் ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது வேப்ப எண்ணெய் 20 மில்லி மருந்தினை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

  வேப்பங்கொட்டைச்சாறு 50 கிராமினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகும் போது பூச்சிகொல்லி மருந்தினை ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். தையோடிகார்ப் 75டபில்யூபி மருந்தினை 750 கிராம் அல்லது அஸிப்பேட் 75எஸ்பி 2 கிலோ அல்லது டைமீதோயேட் மருந்தினை 1 லிட்டர் அல்லது கார்பரில் 50பில்யூபி ஏக்கருக்கு 2.5 கிலோ அல்லது இமிடாகுளோபிரிட் 90 மிலி என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்து கட்டுப்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×