search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில் கொரோனா பாதிப்பு உயர்வால் பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை-கலெக்டர் ஆகாஷ் தகவல்
    X

    ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் ஆகாஷ் பேசிய காட்சி.

    கடையநல்லூரில் கொரோனா பாதிப்பு உயர்வால் பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை-கலெக்டர் ஆகாஷ் தகவல்

    • 2-வது தவணை தடுப்பூசியை 12 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்து றை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-

    பரிசோதனை அதிகரிப்பு

    கடையநல்லூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. நாள் ஒன்றுக்கு 100 மாதிரிகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது 1000 மாதிரிகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசிகள் செலுத்தி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 90 சதவீதம் பேர் செலுத்திக்கொண்டுள்ளனர். 2-வது தவணை தடுப்பூசியை 12 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    பாதிப்பை குறைக்க நடவடிக்கை

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். கடையநல்லூ ரில்மக்களை அதிகம் சந்திக்கும் வணிகர்களிடம் மாதிரிகள் எடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    கொரோனா சோத னையை அதிகப்படுத்தி பரவலை ஓரிரு வாரங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. சுற்றுலா தலமான குற்றாலத்தில் சீசன் இல்லாததால் பயணி களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் போது கொரோனா விதி முறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×