search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாள் இந்நாள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

    நிகழ்ச்சியில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்கிற தலைப்பில் காணொலி ஒளிபரப்பப்பட்டது.
    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.

    ₨1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

    பின்னர் இந்நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்.

    தொடர்ந்து, நிகழ்ச்சியில் 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி' என்கிற தலைப்பில் காணொலி ஒளிபரப்பப்பட்டது.

    மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

    பின்னர், விழாவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    வாழ்வில் ஓர் பொன் நாள் என்று எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது. கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது.

    பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை இருப்பது சிறப்பு வாய்ந்தது.

    கலைஞர் சிலையை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்தது மிக மிக பொருத்தமானது.

    நட்புக்குரிய இனிய நண்பராகவே குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இருக்கிறார். நாட்டில் பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர் கலைஞர்.

    பராசக்தி, பூம்புகார் படத்தின் வசனங்கள் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. கலைஞர் தீட்டிய திட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொருவரும் பயன்பெற்றிருப்பர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. கலைஞரின் சிலையை பார்க்கும்போது நெஞ்சம் உருகிவிட்டது - அமைச்சர் துரைமுருகன்
    Next Story
    ×