search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் பேசிய காட்சி.
    X
    விழாவில் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் பேசிய காட்சி.

    ஆலங்குளம் அருகே மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள்

    ஆலங்குளம் அருகே விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் பொருட்களை யூனியன் தலைவர் வழங்கினார்.
    ஆலங்குளம்:

     ஆலங்குளம் அருகே உள்ள குத்தபாஞ்சான் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகள், விசைத் தெளிப்பான், கைத்தெளிப்பான்,  தென்னை மரக்கன்றுகள், மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் பிளாஸ்டிக் ட்ரம், தக்காளி கூடைகள் மற்றும் பழ மரக்கன்றுகள் மானிய விலையில் ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் வழங்கினார். 

    விழாவில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரிநாராயணன், பசுபதி தேவி திராவிடமணி,  ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன், 

    வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலர் கணேசன், தோட்டக்கலை உதவி ஆய்வாளர் வைத்தியலிங்கம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×