என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொள்ளை நடந்த வீட்டில் பீரோ, நகை வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டிருக்கும் காட்சி.
  X
  கொள்ளை நடந்த வீட்டில் பீரோ, நகை வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டிருக்கும் காட்சி.

  நெல்லை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு - சி.சி.டி.வி. மூலம் போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நெல்லை:

  பாளையை அடுத்த கே.டி.சி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் நித்யகல்யாணி (வயது70).

  இவர் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் மாடியில் வாடகைக்கு வசித்து வரும் நபர், கீழே பூட்டிக்கிடந்த நித்ய கல்யாணியின் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  அவர் அளித்த தகவலின்பேரில் நித்ய கல்யாணி இன்று அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

  உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

  அதிர்ச்சி அடைந்த நித்ய கல்யாணி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நகைகளை  திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×