என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
  X
  கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

  கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
  கோவில்பட்டி:

  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். 

  ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

  கூட்டத்தில் 2021-2022-ம் ஆண்டு வரவு, செலவு அறிக்கை மற்றும் ஒன்றிய பொது நிதி (கணக்கு எண்: 1) 1-4-2022-ல் உபரிநிதி கணக்கீடு படிவம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது உள்பட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இதில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சங்கரசுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் படிபீவி, மேரி, கணக்கர் பாலமுருகன் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×