என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுல லாப்தீன் போட்டியை தொடங்கி வைத்த காட்சி.
  X
  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுல லாப்தீன் போட்டியை தொடங்கி வைத்த காட்சி.

  தென்காசியில் மாரத்தான் போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்காசியில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுத பெரும் விழாவினை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
  தென்காசி:

  75-வது சுதந்திரத் திருநாள் அமுத பெரும் விழாவினை முன்னிட்டு மாரத்தான் போட்டி தென்காசியில் நடைபெற்றது.  போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுல லாப்தீன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். 

  இப்போட்டியில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், கல்லூரிகள், நேரு யுவ கேந்திரா இளையோர் மன்றங்கள் மற்றும் தனியார் விளையாட்டு சங்கங்களில் இருந்தும் மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

  இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் (தென்காசி) கங்காதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், நேரு யுவகேந்திரா பொறுப்பாளர் சங்கர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்  ராம சுப்பிரமணியன் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×