என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  பம்மல் ஜவுளிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பம்மல் ஜவுளிக்கடையில் துணி எடுத்து பணம் கொடுக்காமல் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தாம்பரம்:

  பல்லாவரம், நேரு நகர், மஸ்தான் சாகிப் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர், பம்மல், நல்லதம்பி சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த 3 பேர் ரூ.4 ஆயிரத்துக்கு துணி எடுத்தனர். பின்னர் அவர்கள் பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.அவர்களை ஊழியர்கள் தடுத்தபோது பட்டாகத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

  இதுகுறித்து சங்கர் நகர்போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்து பம்மலை சேர்ந்த தினேஷ், அனகாபுத்தூரை சேர்ந்த நவீன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மதனை போலீசார் தேடி வருகின்றனர்.
  Next Story
  ×