என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ,
  X
  ,

  வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டத்தில் வாழைத்தார்களை வெட்டி உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டுக்கும்  கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 

  இந்த நிலையில்  கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ.300- க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ. 300- க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300- க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200- க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300- க்கும் வாங்கிச் சென்றனர். 

  இந்த வாரம் வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தன. இதனால்  பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.400- க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ. 350- க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350- க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.275-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.350- க்கும் வாங்கிச்சென்றனர். 

  வாழைத்தார் வரத்து குறைவாக இருந்ததால் வாழைத்தார் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
  Next Story
  ×