என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நலத்திட்ட உதவிகளை தனுஷ்குமார் எம்.பி., கலெக்டர் கோபாலசுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கிய காட்சி.
  X
  நலத்திட்ட உதவிகளை தனுஷ்குமார் எம்.பி., கலெக்டர் கோபாலசுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கிய காட்சி.

  கடையநல்லூரில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடையநல்லூரில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கோபால சுந்தரராஜ், தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
  கடையநல்லூர்:

  கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடையநல்லூர் பேட்டை பகுதியில் நடைபெற்றது.  

  மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார்.  ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ்  முன்னிலை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர்  கங்காதேவி அனைவரையும் வரவேற்றார்.  தனுஷ் குமார் எம்.பி. நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேசினார்.

   நிகழ்ச்சியில் தாசில்தார் அழகப்பராஜா (பொறுப்பு)  மண்டல துணை தாசில்தார்  திருமலைமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் காசிலட்சுமி, சங்கரஈஸ்வரி, தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ், ஒன்றிய கவுன்சிலர் மாரிச்செல்வி, புதுக்குடி ஊராட்சி மன்ற தலைவி   கஸ்தூரி இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

   இதில்  478 நபர்களுக்கு ரூ.65 லட்சம்  மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  Next Story
  ×