என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ராமதாஸ்
  X
  ராமதாஸ்

  பா.ம.க. பயிலரங்கத்தில் மீண்டும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்- ராமதாஸ் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தொற்று அச்சம் இப்போது விலகி விட்ட நிலையில், மீண்டும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க பா.ம.க.வின் அரசியல் பயிலரங்கம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  பா.ம.க.வின் அரசியல் பயிலரங்கம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அச்சம் இப்போது விலகி விட்ட நிலையில், மீண்டும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க பா.ம.க.வின் அரசியல் பயிலரங்கம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

  புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பயிலரங்க வளாகத்தின் முகப்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கொடியேற்று விழா நடைபெற உள்ளது. எனது முன்னிலையில் கட்சி தலைவர் ஜி.கே.மணி பா.ம.க. கொடியை ஏற்ற உள்ளார். அதன்பின் 34 அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அரசியல் பயிலரங்கத்தில் அமைப்பு வாரியாக தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×