search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
    X
    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

    தூத்துக்குடியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி 5 இடங்களில் பொதுக்கூட்டம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை

    தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி 5 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    தூத்துக்குடி:

     தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று மே மாதம் 7-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.

    இந்த ஒரு வருடத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தொழில் வளர்ச்சியின் மூலம் வேலைவாய்ப்பை பெருக்குவதை குறிக்கோளாக கொண்டு தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

     இது போன்று அரசு செய்து வரும் நற்செயல்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் நாளை(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு காயல்பட்டினத்தில் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா கலந்து கொண்டு பேசுகிறார்.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) உடன்குடி பஜாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நானும் (அனிதா ராதாகிருஷ்ணன்) தலைமைக் கழக பேச்சாளர்கள் போடிகாமராஜ், திருப்பூர் மனோகர் பாபு, சரத்பாலா ஆகியோர் பேசுகின்றனர்.

    வருகிற 18-ந் தேதி திருச்செந்தூரில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகிறார். 19-ந் தேதி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணியில் தலைமைக் கழக பேச்சாளர்கள் க.ஒப்பிலாமணி, குடியாத்தம் அன்பு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சாத்தான்குளத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் மன்னை இங்கோவன், பவித்திரம் கண்ணன் ஆகியோர் பேசுகின்றனர்.

    இந்த கூட்டங்களில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக்கழக, பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×