என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  சேலத்தில், இலவச தையல் பயிற்சி மையத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில், நாளை இலவச தையல் பயிற்சி மையத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
  சேலம்:

  சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில், இலவச தையல் பயிற்சி மையம் சேலம் 5 ரோடு மெய்யனூர் மெயின்ரோட்டில் மாரியம்மன் கோவில் எதிரில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நாளை(13-ந்தேதி) காலை 9 மணியளவில் நடக்கிறது.

  விழாவிற்கு சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறார்.

  இந்த விழாவில்  எம்.எல்.ஏ.க்கள், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்கிறார்கள்.
  Next Story
  ×