search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    தமிழக அரசு, தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றுவோம் என்று அறிவித்த அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான ஊதியக் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் சுகாதாரத்துறையில் அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருவது பெரிதும் பாராட்டத்தக்கது. அரசு மருத்துவர்கள் மக்கள் நலன் காக்கும் மருத்துவச் சேவையில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார்கள். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை பணியாற்றி வரும் அனைத்து மருத்துவர்களும் பலனடைவார்கள்.

    மத்திய அரசு மருத்துவர்களை ஒப்பிடும்போது தமிழக அரசு மருத்துவர்களின் அடிப்படை ஊதியம் மிகவும் குறைவு. குறிப்பாக கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் எம்.பி.பி.எஸ் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் குறைவாக ஊதியம் வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்தார்கள். ஆனால் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின் போது எதிர்பார்க்கப்பட்ட அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. எனவே தமிழக அரசு, தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றுவோம் என்று அறிவித்த அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான ஊதியக் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றினால் மருத்துவர்கள் ஊக்கமடைந்து தொடர்ந்து உற்சாகத்தோடு மருத்துவப் பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×