என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.
  X
  போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.

  கூடங்குளம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடங்குளம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நெல்லை:

  நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மற்றும் தலைமை காவலர் ரவிச்சந்திரன், போலீஸ்காரர் செல்வகணேஷ் ஆகியோர் நேற்றிரவு கூட்டப்புளி விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த வேனை அங்கேயே விட்டுவிட்டு அதில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

  இதையடுத்து போலீசார் லோடு வேனை சோதனை செய்ததில் சுமார் 2 டன் மதிப்புள்ள ரேஷன் அரிசி 40 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டை சேர்ந்த மோகன் என்பவர் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

  இதையடுத்து நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீ–சாரிடம் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×