search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தாரம்மன் கோவிலில் இருந்து  தட்டுபிரசாதம் கொண்டு சென்ற போது எடுத்த படம்.
    X
    முத்தாரம்மன் கோவிலில் இருந்து தட்டுபிரசாதம் கொண்டு சென்ற போது எடுத்த படம்.

    திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா- கடவுள் வேடம் அணிந்து வந்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

    திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோவில் கொடை விழா  கடந்த 8-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு மாக்காப்பு அலங்காரமும், மறுநாள் (திங்கட்கிழமை) இரவு சந்தன லேபன அலங்காரமும் நடைபெற்றது.

    விழாவில் நேற்று  காலை உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு தீர்த்தம், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    காலை 11 மணியளவில் முத்தாரம்மன் திருக்கோவிலில் இருந்து உச்சினிமாகாளியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு தட்டுபிரசாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து வெயிலுகந்தம்மன் கோவிலிலிருந்து தாடாத்தி அம்மன் எழுந்தருளி வீதி உலாவும் வந்தது. அதன்பின்னர் படையல் கஞ்சி தீபாராதனையாகி, முத்தாரம்மன் கோவில் சேர்ந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனையாகி, வெள்ளி அங்கி சாத்தி, சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

     கொடை விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதி குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏராளமானவர்கள்  நேர்த்திக்கடனாக பல்வேறு தெய்வங்கள்  வேடமணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தலைவர் ஆனந்த ராமச்சந்திரன் பிள்ளை, செயலர்
    ஞானசுந்தரம் பிள்ளை, பொருளாளர் பொன் முருகேசன் பிள்ளை மற்றும் நிர்வாகஸ்தர்கள், சைவ வேளாளர் இளைஞர் பேரவையினர்  செய்திருந்தனர்.
    Next Story
    ×