search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

    சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது 42,193 பேர் எழுதுகின்றனர்.
    சேலம்: 

    தமிழகத்தில் கொரோனா நோய் ெதாற்று பரவல் காரணமாக  கடந்த  2 ஆண்டுகள் 10-ம்  வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படவில்லை. நடப்பாண்டு  நோய் பரவல் குறைந்த நிலையில், பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    அதன்படி  கடந்த 5-ந்தேதி (வியாழக்கிழமை)   முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு  தொடங்கியது.  அதுபோல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை)  தொடங்கியது.

    இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத் தேர்வு நாளை மறுநாள் (10-ந்தேதி) செவ்வாய்க்கிழமை அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுய நிதிப்பள்ளிகளில்  தொடங்குகிறது.  வருகிற 31-ந்தேதி அன்று பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவடைகிறது.   

    154 மையங்கள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 154 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறவுள்ளது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 5 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. 

    இத்தேர்வு மையங்களில் 20,948 மாணவர்கள், 21,245 மாணவிகள் என மொத்தம் 42,193 பேர் பிளஸ்-1 பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர். 

    பிளஸ்- 2 ேதர்வை போல் இந்த தேர்வுக்கும் 42 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 30 வழித்தட அலுவலர்கள், 164 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 164 துறை அலுவலர்கள், 2,150 அறைக் கண்காணிப்பாளர்கள், 390 சொல்வதை எழுதுபவர், 201 நிலையான படையினர், 372 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    401 பறக்கும் படையினர் தேர்வு மையங்களை பார்வையிடும் பொருட்டு முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் 401 ஆசிரியர்கள் பறக்கும் படை குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×