search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக சட்டசபை
    X
    தமிழக சட்டசபை

    சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 15ல் இருந்து 23 ஆக உயர்கிறது

    சென்னை மாநகராட்சி 23 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி 22 சட்டசபை தொகுதிகளில் 23 மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி 2011ம் ஆண்டு பெருநகரம் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. 155 வார்டுகள், 10 மண்டலங்களுடன் செயல்பட்ட மாநகராட்சி 200 வார்டுகளாக உயர்த்தப்பட்டன.

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்த பேரூராட்சி பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாநகராட்சி மண்டலமும் 15 ஆக உயர்ந்தது.

    சென்னை மாநகராட்சியை உள்ளடக்கிய பகுதிகளில் 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆனால் 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே சென்னை மாவட்டத்தில் உள்ளன. மற்ற 6 தொகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன.

    இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மண்டலங்கள் அதிகரிக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் நேரு அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி 23 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி 22 சட்டசபை தொகுதிகளில் 23 மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன.

    இதற்கான வார்டுகள் பிரிக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது. புதிய மண்டலங்கள் மற்றும் அவற்றில் இடம் பெறும் வார்டுகள் பற்றிய உத்தேசபட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

    திருவொற்றியூர் மண்டலத்தில் 18 வார்டுகளும், மாதவரம் பகுதி பொன்னேரி பகுதியில் 15 வார்டுகளும், கொளத்தூர் 7 வார்டுகள், பெரம்பூர்7, ஆர்.கே.நகர்7, ராயபுரம்6, துறைமுகம்6.

    திரு.வி.க.நகர் 6, வில்லிவாக்கம் 6, அம்பத்தூர் மதுரவாயல் பகுதி13, அண்ணாநகர் 7, எழும்பூர் 6, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 7, ஆயிரம்விளக்கு 7, தி.நகர் 7 விருகம்பாக்கம்மதுரவாயல் பகுதி6.

    மதுரவாயல்15, ஆலந்தூர் பகுதி பல்லாவரம் சோழிங்கநல்லூர் 12, சைதாப்பேட்டை 7, மயி லாப்பூர் 7, வேளச்சேரி 8, சோழிங்கநல்லூர் வேளச்சேரி ஆலந்தூர்11, சோழிங்கநல்லூர்9.

    Next Story
    ×