search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காய்கறி விற்பனை செய்ய விரும்பும் இளைஞர்கள் வாகன மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்

    வாகனங்கள் வாயிலாக விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடுகள்தோறும் வழங்கப்படுவதாகும்.
    திருப்பூர்:

    காய்கறி விற்பனை செய்ய விரும்பும் இளைஞர்கள் வாகன மானியம் கோரி விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடமாடும் காய்கறி விற்பனை திட்டத்தில், வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

    இதன் நோக்கம் வாகனங்கள் வாயிலாக விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடுகள்தோறும் வழங்கப்படுவதாகும். மேலும் கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு 40 சதவீதம் மானியம் அல்லது அரசு வாயிலாக  ரூ.2 லட்சம்  வழங்கப்படவுள்ளது.

    எனவே மாவட்டத்தில் பிளஸ்- 2 படித்த 21 முதல் 45 வயது வரையுள்ள சொந்த அல்லது குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் நபர் வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் வருகிற 20-ந்தேதி வரை விண்ணப்பிக்க  அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 20-ந்தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கோவையில் உள்ள வேளாண் வணிக துணை இயக்குனரை 98656 78453 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×