search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பெண்கள் கும்மியடித்து வழிபட்ட காட்சி.
    X
    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பெண்கள் கும்மியடித்து வழிபட்ட காட்சி.

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் கும்மி அடித்து வழிபாடு

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் கும்மி அடித்து வழிபாடு நடத்தினர்.
    புளியங்குடி:

    தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி அரசு மருத்துவ மனை அருகில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம் உள்ளது. அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற இந்த கோவிலில்  பெரியபாளையத்து பவானி அம்மன், நாககன்னியம்மன், நாகம்மனுக்கு சித்திரை மாதம் பெருந் திருவிழாவிற்கு கால் நாட்டுதலுடன் இரண்டாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி திருவிழா நடை பெற்று வருகிறது.

    விழா நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள், மாலை முளைப்பாரி வளர்ப்பு கும்மிப்பாட்டு நடந்து வருகிறது.

    நேற்று 4-ம் நாள் திருவிழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குருநாதர் சக்தி அம்மா தலைமையில் கும்மிப்பாட்டு பாடி கும்மி அடித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி அளவில் பால்குடம், தீர்த்தக்குடம், ஊர்வலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை விநாயகர் கோவிலில் இருந்து ஊர் சுற்றி வருதல் மற்றும் காலை 10 மணிக்கு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    மதியம் 3 மணி அளவில் 500-க்கும் மேற்பட்ட அக்னி சட்டி எடுத்து ஊர் சுற்றி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8மணிக்கு அன்னதானம் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு சாம பூஜை படைப்பு நடைபெறுகிறது.

    நிறைவு நாளான 4-ந்தேதி காலை 7 மணிக்கு கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.8 மணி அளவில் முளைப்பாரி எடுத்து ஊர் சுற்றி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் அம்மாக்களுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அறுவை அன்னதானம் நடைபெறும்.

    மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தி அம்மா மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×