search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் நாளுக்குநாள் சரிந்து வரும் ஆடு, மாடு விற்பனை

    கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் நாளுக்குநாள் சரிந்து வரும் ஆடு, மாடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
    எடப்பாடி:

    தமிழகத்தின் முக்கிய கால்நடைச் சந்தைகளில் ஒன்றான, கொங்கணாபுரம் கால்நடைச்சந்தையில், குறிப்பிடும் படியான அளவில் நடைபெற்றுவந்த கால்நடைவணிகம், அண்மைகாலமாக வெகுவாக குறைந் துள்ளது.  

    சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வார சந்தையான, கொங்க ணாபுரம் கால்நடைச் சந்தையில், கால்நடைகள் மற்றும்  காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் விற்பானை யா வது வழக்கம்.

    மாநில அளவில் புகழ்பெற்ற இக்கால் நடை சந்தையானது, வாரந்தோறும்  சனிக்கிழமை அன்று நடைபெறுற்று வருகிறது.  

    இச்சந்தையில், அதிக எண்ணிக்கையில் ஆடு, மாடு மற்றும் கோழிகள்,  பந்தையபுறாக்கள், கறவை மாடுகள்,  உழவுப்பணிக்கான காளைமாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக இச்சந்தையில் அதிக எண்ணிக்கையில் சண்டை சேவல்கள் என பல்வேறு வகையான கால்நடைகள் விற்பனையாகி வருகின்றன.

    மாநில நெடுஞ்சாலை யினை ஒட்டி அமைந்துள்ள இச்சந்தைக்கு, தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநில வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து  வளர்புக்கான கால்நடைகள் இறைச்சிக்கான கால்நடைகள் மற்றும் சண்டைசேவல்கள் உள்ளிட்ட கால்நடைகளை வாங்கிச்செல்கின்றனர். வாரந்தோறும் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்படும் இக்கால்நடை சந்தையில், அதிகப்படியான வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், அண்மைகாலமாக  உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், நாடுமுழுவதும் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகள், நோய்த்தொற்று குறித்த அச்சம், அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பறவைக்காய்சல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், இச்சந்தைக்கு வரும் நுகர்வோர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து போனது. 

    மேலும் எரிபொருட்களின் விலைஉயர்வால் நாடு மாநி லம் முழுவதும் இறைச்சியின் விலை அதிகரிப்பு கடுமையான வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால். கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் வழக்கமாக நடைபெற்றுவந்த கால்நடை வணிகம், பாதியாக குறைந்துள்ளதாக இங்கு வரும் வியாபாரிகள் தெரி விக்கின்றனர்.

     மேலும் இச்சந்தையின் பரப்பளவு தற்போது பாதியாக குறைக்கப் பட்டு அதில் பேருந்து நிலையம்  மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×