search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "falling"

    • சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் குருநாதன் வழுக்கி விழுந்துள்ளார்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, குரு நாதன் பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து, கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அருகே உள்ள கூகலூர், மனுவக்காடு பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (54). இவர், நாகர்பாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் குருநாதன் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை, கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரது உடல் நிலை மேலும் மோசமானதால் பெருந்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி, குரு நாதன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து, கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு தகடுகள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள போரக்ஸ் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஒடிசாவைச் சேர்ந்த மீட்டு பக்தா, சுரேந்தர் தாஸ், கபில் திவாரி ஆகியோர் பழைய இரும்பு துண்டுகளை பாய்லரில் தூக்கி போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிக அழுத்தம் காரணமாக பாய்லரில் இருந்து திடீரென இரும்பு துண்டுகள் 3 பேர் மீதும் விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த மீட்டு பக்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரையும் மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காலிபிளவர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தமிழ்நாட்டில் மிகப்பெரியது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா மற்றும் சுற்று வட்ட மாநிலங்களுக்கு அதிகமான காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள விவசாயிகள் தங்களது காய்கறிகளை இச்சந்தையில் வந்துதான் விற்பார்கள்.

    தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பால் விளைச்சல் குறைந்து காய்கறி வரத்து குறைவானது.

    தற்போது காலிபிளவர் மூலசத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், அத்திக்கோம்பை போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்தது. இப்பகுதியில் இருந்து அதிகமான விளைச்சலால் காலிபிளவர்கள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது.

    ஆனால் விலை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 20 பூ கொண்ட ஒரு பை கடந்த மாதம் ரூ.250 முதல் 300 வரை விற்பனையானது. ஆனால் இப்போது ரூ.100க்கு மட்டுமே விலை கேட்கப்பட்டது.

    மலை பகுதிகளில் இருந்து வரக்கூடிய ஒட்டு ரக காலிபிளர் பூக்கள் வராததால் நாட்டு பூக்கள் விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை குறைவாகவே இருந்தது. தற்சமயம் பனி மற்றும் மழை காலம் என்பதால் இந்த காலிபிளவர் பூக்களில் அழுகல் நோய் ஏற்பட்டு அதிகம் சேதமடைந்த நிலையிலும் காலிபிளவர் பூக்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.

    எனினும் நாட்டு பூக்கள் விலை குறைவாக இருந்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    வாடிப்பட்டியில் பெரியாறு பாசன கால்வாயில் தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலியானார்.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டி ஊராட்சி சின்னமநாயக்கன்பட்டி பெரியாறு பாசன கால்வாயில் ஆண் பிணம் மிதப்பதாக கிராம நிர்வாக அதிகாரி ஜெயராஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் இறந்தவர் மதுரை அருகே கீழ் மதுரை சின்னக்கண்மாய் தெற்கு தெருவை சேர்ந்த மாறன் (வயது 53) என்றும் இவர் வாடிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு சுகுணாசுந்தரி (45)என்ற மனைவியும், 3 மகன், ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் கம்பத்தில் நின்று இடுப்பில் ‘பெல்ட்’ கட்ட முயன்றபோது தவறி கீழே விழுந்து வயர்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது35). வயர்மேனான இவர் மின்வினியோகத்தை நிறுத்தி விட்டு வேலை செய்திட ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறினார். கம்பத்தில் நின்று இடுப்பில் ‘பெல்ட்’ கட்ட முயன்றபோது தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்த சக ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து பஜார் மின்வாரிய உதவி பொறியாளர் ஈஸ்வரி, புகாரின் பேரில் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    பரங்கிமலையில் தடுப்புச்சுவரில் மோதியதால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். #ElectricTrain #Runway #Youth #death
    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி விரைவு மின்சார ரெயில் நேற்று இரவு சென்று கொண்டு இருந்தது. சில குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரெயில் நின்று செல்லும் என்பதால் இந்த ரெயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    மேலும் பணி முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்லும் நேரம் இயக்கப்படுவதால் பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி இந்த ரெயிலில் பயணம் செய்வார்கள். கிண்டி ரெயில் நிலையத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்த இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் ஏறினர். உடனே ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென அங்கிருந்த தடுப்புச்சுவரில் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 2 வாலிபர்கள் மோதினர்.

    இதில் தவறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். உயிரிழந்தவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டீபன் (வயது 23), தாம்பரத்தை சேர்ந்த விக்னேஷ் (20) என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கம்பத்தில் பை சிக்கியதால் செங்கல்பட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். அடிக்கடி பரங்கிமலையில் கம்பம், தடுப்புச்சுவரில் மோதி பயணிகள் இறக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. எனவே இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து விபத்தை தவிர்க்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #Tamilnews 
    ×