search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private factory"

    • தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.
    • 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எடமணல்-திருநகரி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.

    இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

    இந்நிலையில் 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் எடமணல் கிராமத்தில் நடைபெற்றது ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடமணல், திருநகரி, வேட்டங்குடி, திருமுல்லைவாசல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் தார் பிளாண்ட் தொழிறடசாலையை தடை செய்வதற்கான முயற்சிகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிப்பது, தார் பிளாண்ட் தடை செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்களை அணுகி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற கேட்டு பெறுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் தச்சூர்-பொன்னேரி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தச்சூர் கூட்டுச்சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு பொன்னேரியை அடுத்த வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 46) வேலை செய்து வந்தார். நேற்று காலை பணியில் இருந்த ஆனந்த குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தொழிற்சாலை நிர்வாகத்தினர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லும்படி கூறி உள்ளனர். ஆனால், ஆனந்தகுமாருக்கு உரிய மேல்சிகிச்சை அளிக்காமல் நிர்வாகத்தினர் அவரை மீண்டும் தொழிற்சாலைக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில், உரிய மேல்சிகிச்சை அளிக்காததாக புகார் கூறி தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று மாலை தொழிற்சாலை முன்பு தச்சூர்-பொன்னேரி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் நேரில் வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். போராட்டம் காரணமாக அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு தகடுகள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள போரக்ஸ் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஒடிசாவைச் சேர்ந்த மீட்டு பக்தா, சுரேந்தர் தாஸ், கபில் திவாரி ஆகியோர் பழைய இரும்பு துண்டுகளை பாய்லரில் தூக்கி போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிக அழுத்தம் காரணமாக பாய்லரில் இருந்து திடீரென இரும்பு துண்டுகள் 3 பேர் மீதும் விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த மீட்டு பக்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரையும் மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் தனியார் மோட்டார்சைக்கிள் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம் பகுதியில் தனியார் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் சிலர் தொழிற்சங்கம் ஆரம்பித்ததாக தெரிகிறது. இதையடுத்து 2 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் கடந்த 21-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    ஏரிப்பாக்கம் தனியார் தொழிற்சாலை தொழிலாளர் மற்றும் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட 4-வது காலகட்ட நீண்டகால புதிய உயர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

    2002-ல் ஏற்படுத்தப்பட்ட நிலையான சட்டத்தை தொழிலாளர்களுக்கு எதிரான விதிகளை நீக்கி புதிய நிலையான சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.ஒப்பந்த தொழிலாளர்களின் மாத ஊதியத்தை குறைந்தபட்சம் ரூ 18 ஆயிரம் என்று உயர்த்தி வழங்க வேண்டும்.

    3 ஆண்டுகள் பணி முடித்திருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை சுதேசி மில் அருகில் ஏரிப்பாக்கம் தனியார் தொழிற்சாலை தொழிலாளர், ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    தங்களது கோரிக்கைகளை புதுவை அரசும் தொழிலாளர் துறையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். #tamilnews
    குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்து தோய்த்த தீக்குச்சிகள் மற்றும் காலி தீப்பெட்டிகளை தனித்தனியாக வெளியில் கொடுத்து, தீப்பெட்டிகளுக்குள் குச்சிகளை நிரப்பும் ஜாப்ஒர்க் செய்யும் பணி பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

    குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து குடியாத்தம் காளியம்மன்பட்டி பகுதியில் உள்ள ஜாப்ஒர்க் செய்யும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தீக்குச்சி மற்றும் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு, வேலை நடைபெற்று வந்தது. இந்த பணியில் ஆண்கள், பெண்கள் என 25 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று மாலையில் மருந்து தோய்த்த தீக்குச்சிகள் இருந்த மூட்டையை தொழிலாளர்கள் எடுத்து வைத்து கொண்டிருந்தபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி உள்ளது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த மற்ற மூட்டைகளுக்கும், தீப்பெட்டிகளுக்கும் பரவியது. உடனடியாக அங்கிருந்த பணியாளர்கள் வெளியே வந்து விட்டனர். தீ வேகமாக பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பொருட்கள் எரிந்து நாசமாயின. மேலும் இதுதொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர் இருதயராஜ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த தீ விபத்தின்போது பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி அனைவரும் தப்பினர். 
    திருப்போரூர் அருகே, தனியார் தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    திருப்போரூர்:

    மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 19). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 6 மாதங்களாக எந்திரம் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் சந்தோஷ், தொழிற்சாலையில் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எந்திரம் பழுதாகி நின்றதால், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரம் இயங்கியதால், அதை பழுதுபார்த்து கொண்டிருந்த தொழிாளி சந்தோஷ், எந்திரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், எந்திரத்தில் சிக்கி பலியான தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதமானது.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஆரியபாளையத்தில் நூலுக்கு பாவு தோய்க்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து திருபுவனை, திருக்கனூர், கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து இன்று காலை வரை போராடி தீயை அணைத்தனர். எனினும் தொழிற்சாலை முழுவதும் எரிந்து போனது.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து நடந்த தொழிற்சாலையை கலெக்டர் அபிஜித் விஜய்சவுத்ரி, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×