search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தூத்துக்குடி மாநகராட்சியில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 30-ந்தேதி சிறப்பு முகாம்

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி போடாதவர்ளுக்கு வருகிற 30-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    தூத்துக்குடி:

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவது  குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட  கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் மூலம் பல்வேறு கட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அரசின் விதி படி 2-ம் கட்டமாக செலுத்த வேண்டிய தடுப்பூசியை மாநகர பகுதியில் உள்ள  60 வார்டுகளிலும் சுமார் 60 ஆயிரம் பேர் இதுவரை செலுத்தாமல் உள்ளனர்.

     வருகிற 30-ந்தேதி ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட 127 இடங்களில் சிறப்பு தடுப்பபூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் இத்தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் சாரூஸ்ரீ ஆகியோர் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

    இதனை மாநகர பகுதி மக்கள் பயன்படுத்திக் கொண்டு கொரோனா இல்லாத மாநகராட்சியாக  உருவாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×