search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corporation area"

    • நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    அதற்கு ஏற்ப நெல்லை மாநகராட்சியில் சாக்கடை வாறுகால்கள் தூர்வாரி கொசு உற்பத்தியாகாமல் தடுப்பது, சாலைகளை பெருக்கி சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி சுகா தாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

    நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரில் இன்று டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து சொக்கப்பனை முக்கு செல்லும் சாலையில் உள்ள சாக்கடை வாறுகால் தூர்வாரும் பணி கவுன்சிலர் கிட்டு முன்னிலையில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இன்று நடைபெற்றது. தொ டர்ந்து நயினார் குளம் மார்க்கெட்டில் இருந்து டவுன் ஆர்ச் வரை சாலை பெருக்கி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பின்னர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தெரு க்களில் இருபுறமும் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

    முன்னதாக டவுன் கல்லணை மகளிர் பள்ளியில் மாணவிகளிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பேட்டையில் உள்ள சரக்கு முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர் கிட்டு முன்னிலையில் தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    • மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    • இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. தெரு வோரங்களில் கூட்டமாக கூடியிருந்து தெருவில் வரும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன.

    பகல் நேரங்களில் சில சமயம் தெருவில் நடமாடும் பெண்கள், குழந்தைகளையும் துரத்துகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர்.

    முன்பு கறிக்கடை முன்பு நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான். முன்பு மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    தற்போது அது செய்யப்ப டாமல் உள்ளதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மாநகர் பகுதியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகின்றன. நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    எனவே முன்பு போல் தெருவில் சுற்றி தெரியும் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×