search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "growing problem in the"

    • மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    • இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. தெரு வோரங்களில் கூட்டமாக கூடியிருந்து தெருவில் வரும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன.

    பகல் நேரங்களில் சில சமயம் தெருவில் நடமாடும் பெண்கள், குழந்தைகளையும் துரத்துகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர்.

    முன்பு கறிக்கடை முன்பு நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான். முன்பு மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    தற்போது அது செய்யப்ப டாமல் உள்ளதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மாநகர் பகுதியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகின்றன. நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    எனவே முன்பு போல் தெருவில் சுற்றி தெரியும் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×