search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    X
    சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

    செங்கோட்டை மேலூர் வாணியர் சமுதாய நலக்கூடத்தில் வேல்முருகன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
    செங்கோட்டை:

    செங்கோட்டை மேலூர் வாணியர் சமுதாய நலக்கூடத்தில் வேல்முருகன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு செங்கோட்டை நகராட்சி 14-வது வார்டு பகுதிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் சதுரங்க போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு 14-வது வார்டு காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் பொன்னுலிங்கம் தலைமை தாங்கினார்.

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் முத்துசாமி, கலைஞர் தமிழ்சங்க செயலாளர் ஆபத்துக்காத்தான், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செந்தில்ஆறுமுகம் வரவேற்று பேசினார்.

    அதனைத்தொடர்ந்து 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பிற்கும் இடையே நடைபெற்ற போட்டியில் துர்காஸ்ருதி முதல்இடமும், 6-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பிற்கும் இடையே நடந்த போட்டியில் சந்தியா முதல் இடமும் பெற்றனர். 8-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பிற்கும் இடையே நடந்த போட்டியில் ஹரிசரண் முதல் இடமும், பட்டு இரண்டாம் இடமும் பெற்றனர்.

     இவர்களுக்கு ரொக்கபணம், பாராட்டு சான்று, விருதுகளை பொன்னுலிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கி வாழ்த்தினர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட 18 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்று விருதுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமர், நிர்வாகிகள் மற்றும் நகர இளைஞரணி துணை செயலாளர் லெட்சுமணன், வாணியர் சமுதாய நிர்வாகிகள், பயிற்சியாளர் ராஜா நரேஷ் மற்றும் வேல்முருகன் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் மாணவ, மாணவி-களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர காங்கிரஸ் இளைஞரணி செயலாளர் ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.
    Next Story
    ×