search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் - நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தல்

    வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், மருந்து விலை அதிகரித்து வருகின்றன.
    பல்லடம்:

    பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் மணிக்குமார், முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், மருந்து விலை அதிகரித்து வருகின்றன. மற்றொருபுறம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர், சுங்க கட்டணம், தொழில் நிறுவனங்களுக்கான உற்பத்தி, மூலப்பொருட்கள் ஆகியவற்றின் விலையும் அதிகரித்தபடி உள்ளன. 

    இதற்கிடையே தமிழக அரசும் தன் பங்காக சொத்து வரியை 50 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இது பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய பாரத்தை சுமத்தி வைக்கும் செயல்.

    சொத்து வரி உயர்வால் வீடு, கட்டட வாடகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சாமானிய மக்கள், சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். 
    Next Story
    ×