என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
  X
  கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

  விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிலிக்கல்பாளையம் அருகே விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் இன்று காலை பங்குனி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

  விஜயகிரி வடபழனி ஆண்டவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

  அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விஜயகரி வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

  இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
  Next Story
  ×