என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்
  X
  தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்

  தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்- சென்னை வானிலை மையம் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  13-ந்தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

  சென்னை:

  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நெல்லை உள்பட சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

  தென்மேற்கு வங்ககடல் பகுதியில் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடி மின்ன லுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  13-ந்தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

  Next Story
  ×