என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முன்னாள் மத்தியமந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்திய காட்சி.
  X
  முன்னாள் மத்தியமந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்திய காட்சி.

  பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் பேரணி-ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  நெல்லை:

  பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடு தழுவிய போராட்டம் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.

  அதன்படி கடந்த 31-ந் தேதி முதல் கட்ட போராட்டம் பல்வேறு பகுதியில் நடை பெற்றது. இந்நிலையில் இன்று 2-ம் கட்ட போராட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தச்ச நல்லூரில் நடந்தது. 

  போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். தச்சை மண்டல தலைவர் கெங்காராஜ் முன் னிலை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கண்ட உரையாற் றினார். 

  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங் கள் எழுப்பினர். மேலும் பெண்கள் கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கேனுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் பேரணியாக சென்று மத்தியஅரசை கலைக்க வேண்டும் என காந்திசிலையிடம் மனு அளித்தனர்.

  Next Story
  ×