search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    அடுத்த நிதியாண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அடுத்த நிதியாண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில், கேள்வி நேரத்த்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படாமல் இருந்து வருவதாகவும், வரும் நிதியாண்டில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற்று 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

    மேலும், ஏற்கனவே செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மக்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு பரிசீலிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×