search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் - விவசாயிகள் புகார்

    மின் கம்பங்கள், கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு இல்லை என விவசாயிகளை அலைக்கழிப்பதோடு பல அலுவலகங்களில் செலவுத் தொகை என முறைகேடாக பணம் கேட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    உடுமலை:

    தமிழக அரசு சார்பில் விவசாய மின் இணைப்புகள் வேண்டி 2003 ஏப்ரல் 1 முதல் 2013 மார்ச் 31-ந்தேதி வரை சாதாரண வரிசையில் பதிவு செய்தவர்களுக்கும், 2013 ஏப்ரல் 1 முதல் 2018 மார்ச் 31-ந்தேதி வரை, ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

    விவசாய மின் இணைப்புகளை வரும் 31-ந்தேதிக்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உடுமலை பகுதிகளில் பெரும்பாலான பிரிவு அலுவலகங்களில் இப்பணி மந்தமாகவே நடந்து வருகிறது.

    மின் கம்பங்கள், கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு இல்லை என விவசாயிகளை அலைக்கழிப்பதோடு பல அலுவலகங்களில் செலவுத்தொகை என முறைகேடாக பணம் கேட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    எனவே விவசாய மின் இணைப்புகள் வழங்குவதற்கு தேவையான கம்பி, கம்பம் மற்றும் உபகரணங்கள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் அரசு அறிவித்துள்ளபடி கூடுதல் தொகை பெறாமல் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், நிலுவையில்லாமல் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×