என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம
  X
  மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம

  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  தூத்துக்குடி:

  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தி.மு.க. அரசு பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக கூறி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர்  சின்னத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹென்றி தாமஸ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீரபாகு,  துணை செயலாளர்  வெயிலூமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×