search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் பொன்முடி
    X
    அமைச்சர் பொன்முடி

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்- அமைச்சர் பொன்முடி

    விழுப்புரம் நகராட்சியை பொருத்தவரை 42 வார்டுகளும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் அமோக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சி தேர்தலையொட்டி விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் பொன்முடி, அவரது துணைவியார் விசாலாட்சி பொன்முடி ,மகன் டாக்டர்பொன்.கவுதம சிகாமணி எம்.பி ஆகியோருடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விழுப்புரம் நகராட்சியை பொருத்தவரை 42 வார்டுகளும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் அமோக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.மேலும் வாக்காளர்கள் அச்சமின்றி இன்று காலை வாக்களித்த வந்ததை பார்த்ததால் மக்கள் எந்தளவுக்கு ஆர்வத்துடன் வாக்களிக்க வந்துள்ளார்கள் என்று இதன் மூலம் தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×